March 10, 2016 gizbot.com
அமெரிக்க அதிபர் ஒபமாவின் பதவிக்கலாம் முடிவதற்குள் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் சம்பந்தப்பட்ட 106 வல்லுனர்களுக்கு ஒரு உயரிய விருதை வழங்க முடிவெடுத்துள்ளார். அதன்படி அமெரிக்காவின் உயரிய விருதான இளம் சுயாதன ஆய்வாளர்கள் விருது மொத்தம் 106 வல்லுனர்களுக்கு வழங்கப்பட உள்ளது. அதில் 6 பேர் அமெரிக்க வாழ் தமிழர்கள் என்பது குறிபிடத்தக்கது.
இந்த உயரிய விருது 1996 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அதிபராக இருந்த பிள் கிளிண்டனால் துவக்கப்பட்டது.
அந்த 6 இந்தியர்களின் பணிகளையும் மற்றும் அவர்களை பற்றிய சிறு தொகுப்பை பற்றி தற்போது காண்போம்.
1. மிலிந்த் குல்கர்னி,
இணை பேராசிரியர், மின் மற்றும் கணினி பொறியியல் பள்ளி, பர்து பல்கலைக்கழகம். இவரது ஆராய்ச்சி, புரோகிராமிங் மொழிகள் மற்றும் கம்பைலர்களை கவனம் செலுத்துகிறது.
2. கிரண் முசுருனு,
ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் ஸ்டெம் செல் மற்றும் மறு உற்பத்தி உயிரியல் துறையில் உதவி பேராசிரியர் இருக்கும் இவர் நிரந்தரமாக கொழுப்பின் அளவை குறைக்க ஒரு ‘ மரபணு எடிட்டிங் ‘ அணுகுமுறையை உருவாக்கியவர் ஆவார்.
3. சச்சின் பட்டேல்,
வண்டேர்பிளிட் பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் மனநோய், மூலக்கூறு உடல் இயங்கியல் மற்றும் உயிரி இயற்பியல் ஆகிய துறைகளில் உதவி பேராசிரியர். இவரின் ஆய்வு உளவியல் சீர்கேடுகளில் மூளையின் செயல்பாடும், சிக்கலான பங்கும் பற்றியதாகும்.
4. விக்ரம் ஷாம்,
நாசாவின் க்ளென் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றுகிறார். பையோமிமெடிக்ஸ், ஆற்றல் அறுவடை, இயந்திர ஓட்ட இயற்பியல், ஓட்டம் காட்சிப்படுத்தல், மற்றும் நீர் சுத்திகரிப்பு கணிப்பு ஆகிய பல துறைகளில் ஆய்வு செய்கிறார்.
5. ஷேவெடக் படேல்,
வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் மற்றும் மின் பொறியியல் பேராசிரியர். புதிய சென்சார் அமைப்புகள் மற்றும் புதிய தொடர்பு தொழில்நுட்பங்கள் குறித்து ஆய்வு செய்பவர்.
6. ராகுல் மன்கரம்,
பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் மின் முறைமை மற்றும் பொறியியல் துறையில் இணை பேராசிரியர். வலைப்பின்னலுக்குள் பதிக்கப்பட்ட அமைப்புகளுள் நிகழ் நேர திட்டமிடல்களுக்கான வழிமுறைகளை பற்றிய ஆய்வில் ஈடுபடுபவர்.