January 31, 2017 தண்டோரா குழு
அமெரிக்காவில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இந்திய தொழிலதிபர் கைது செய்யப்பட்டார்.
குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர் பரமன் ராதா கிருஷ்ணன் (53). இவர் வர்த்தகம் தொடர்பாக அமெரிக்கா சென்றுள்ளார். தன் பணிகளை முடித்து விட்டு இந்திய திரும்புவதற்காக மின்னேபோலிஸ் நகரில் உள்ள கிராண்ட் போர்க் விமான நிலையத்திற்கு 28ம் தேதி வந்துள்ளார். அவரிடம் வெடிகுண்டு இருப்பதாகக் கிடைத்த தகவலின்படி விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதை அறிந்த அவருடைய மனைவி மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜக்கு அனுப்பிய ட்விட்டர் செய்தியில், “என்னுடைய கணவர் குற்றமற்றவர். அவரை விடுவிக்க வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.
பரமன் ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு பதிலளிக்கையில், “அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்து அதிகாரி நவ்தேஜ் சர்ணாவிடம் இது குறித்து தகவல் அனுப்புமாறு உத்தரவிட்டுளேன்” என்றார்.
மின்னேபோலிஸ் காவல்துறையினர் கூறுகையில், “கிராண்ட் போர்க் விமான நிலையத்தில் இருந்து செயின்ட் பவுல் சர்வதேச விமான நிலையம் செல்ல விமான நிலையத்திற்கு வந்தார். அதிகாலை 5.14 மணியளவில் வெடிகுண்டு மிரட்டல் குறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்தது. உடனே அங்கு இருந்த அனைவரையும் வெளியேற்றினோம்” என்றார்.
ஆனால், உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், “ராதாகிருஷ்ணன் வைத்திருந்த பையில் வெடிகுண்டு இருப்பதாக பயணி ஒருவர் பயண முகவரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, கிராண்ட் போர்க் மண்டல வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
சோதனையின்போது வெடிகுண்டுகளோ அல்லது அபாயத்தை ஏற்படுத்தும் பொருட்களோ அவர் வைத்திருந்த பையில் இல்லை. இருந்தும் அவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், இந்த வெடிகுண்டு மிரட்டலுக்கு பின்னால் உள்ள நோக்கம் என்னவென்று என்ற விவரங்களை காவல்துறையினர் வெளியிடவில்லை” என்றனர்.