July 31, 2017 தண்டோரா குழு
அமெரிக்காவில் சாலையில் நடந்தது செல்லும் பாதசாரிகள் கைப்பேசி மற்றும் மின்னணு சாதனங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஹவாய் மாகணத்தின் தலைநகரான ஹோநோலூவில் ‘பாதசாரிகள் பாதுகாப்பு மசோதா’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சாலையில் நடந்தது செல்லும் பாதசாரிகள், தங்கள் கைபேசியில் குறுஞ்செய்திகள் அனுப்பிக்கொண்டோ அல்லது பேசிக்கொண்டு செல்வதால், விபத்துகளுக்கு ஆளாகின்றனர். இதைக் குறைப்பதற்காக தான் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த தடை வரும் அக்டோபர் மாதம் 25ம் தேதி முதல் அமலுக்கு வரும்.
இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு 15 முதல் 35 டாலர் வரை அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து மீறுபவர்களுக்கு 75 முதல் 99 டாலர் அபராதம் விதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சட்டம், தனி மனித சுதந்திரத்திற்கு தடையாக இருக்கிறது என்று சிலர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இது போன்ற சட்டங்கள் பாதசாரிகளுக்கு பாதுகாப்பை தரும் என்றும் நடந்தது செல்பவர்களின் கவனத்தை சிதறாது என்று சிலர் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில்,சாலையில் நடந்தது செல்லும் பாதசாரிகள் பாதுகாப்பிற்காக கைபேசி பயன்படுத்தக் கூடாது என்று தடைவிதித்த முதல் நாடு அமெரிக்க என்பது குறிப்பிடத்தக்கது.