June 27, 2017 தண்டோரா குழு
உலகின் அசிங்கமான நாய்’ என்ற போட்டி, கடந்த 29 ஆண்டுகளாக, அமெரிக்காவின் கலிஃபோர்னியாவின் பெட்டலுமாவில் நடைபெற்று வருகிறது.
அவ்வகையில் உலகிலேயே அழகற்ற நாய் போட்டி கடந்த ஜூன் 23ம் தேதி நடைபெற்றது. அந்த போட்டிக்கு உலகின் பல பகுதியிலிருந்து அழகற்ற நாய்கள் கலந்துக்கொண்டன.
இந்த போட்டியில் கலந்துக்கொள்ளும் நீதிபதிகள் இரண்டு முக்கியமான காரியங்களை கவனிப்பார்கள். அதன் பிறகு வெற்றியாளரை தேர்ந்தெடுப்பார்கள். முதலாவதாக இந்த போட்டியில் கலந்துக்கொள்ளும் அழகற்ற நாயின் தோற்றத்தை பார்வையாளர்கள் எப்படி எடுத்து கொள்கிறார்கள். இரண்டாவதாக விசித்திரமாக காணப்படும் தங்களுடைய செல்ல பிராணியின் மேல் உரிமையாளர்கள் எப்படி அன்பு செலுத்துகிறார்கள் என்பது கவனிக்கப்படும். அதற்கு பிறகு, எந்த நாய் வெற்றி பெற்றது என்பது அறிவிக்கப்படும்.
இந்த போட்டியில் வெற்றியாளருக்கு 1,5௦௦ டாலர் தொகையும், அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் நடைபெறும் பல ஊடக தோற்றங்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும்.
சொனோமா மாரின் பாயர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறுகையில்,
“செல்ல பிராணிகளிடம் குறைகள் இருப்பினும், அன்பு காட்டவும், தத்து எடுக்கவும், குடும்பத்தின் ஒரு அங்கத்தினராக கருதவும் முடியும். ஒவ்வொரு ஆண்டும் இந்த போட்டிக்கு வருபவர்கள் தங்களுக்கும் தங்கள் செல்ல பிராணிக்கு இடையே இருக்கும் உறவின் கதைகளை மக்கள் என்னுடன் பகிர்ந்து கொள்கின்றனர். கேட்பதற்கு மிகவும் சந்தோசமாக இருக்கும்” என்று கூறினார்.