July 1, 2017 தண்டோரா குழு
அமெரிக்க நாட்டில் இரண்டு இந்திய வம்சாவளிகள் சிறந்த குடிபெயர்ந்தவர்களாக அமெரிக்க அரசால் கவுரவிக்கப்பட உள்ளனர்.
அமெரிக்காவில் சுதந்திர தினம் வரும் ஜூலை 4ம் தேதி கொண்டப்படவுள்ளது.இவ்விழாவில் இந்திய வம்சவாளியான சந்தானு நரேன் மற்றும் விவேக் மூர்த்தி ஆகியோருக்கு ‘சிறந்த குடியேறிவர்கள்’ விருது வழங்கப்படவுள்ளது.
அமெரிக்காவில் பிறந்த விவேக் மூர்த்தி(39), பிரபல ஹார்வர்ட் மற்றும் யாலே கல்லூரியின் முன்னாள் மாணவர். கடந்த 2014ம் ஆண்டு, முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவால் அந்நாட்டின் மருத்துவ ஜெனரல் பதவியில் நியமிக்கப்பட்ட முதல் இந்திய அமெரிக்கர் ஆவார். ஆனால் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றிய பிறகு, அவரை அந்த பதவியிலிருந்து இவ்வாண்டு ஏப்ரல் மாதம் நீக்கப்பட்டார்.
சந்தானு நரேன்(55) ஹைதராபாத் நகரில் பிறந்தவர். அமெரிக்காவின் பெர்கிலே நகரிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரானிக் இன்ஜினியரிங் பாடத்தில் இளநிலை பட்டமும், கம்ப்யூட்டர் சயின்ஸ் படத்தில் முதுநிலை பட்டமும் மற்றும் எம்பிஏ பட்டமும் பெற்றவர்.
மேலும் அவர் (USIBC) உறுப்பினர் ஆவார். அதிபர் டிரம்பை சந்திக்க வந்த போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வந்த சிஇஒ குழுவில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.