July 1, 2017 தண்டோரா குழு
அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளை சேர்க்கும் திட்டம் ஆறுமாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளை சேர்க்கும் திட்டத்தை முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா கொண்டு வந்தார். இந்த திட்டத்தை பலரும் ஆதரித்தனர். ஆனால், தற்போது திருநங்கைகள் ராணுவத்தில் சேருவதை பெண்டகன் ஒத்தி வைத்துள்ளது.
இது தொடர்பாக பெண்டகன் செய்திதொடர்பாளர், டானா வைட் கூறுகையில்,
“அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் சேருவதை வரும் ஜனவரி 1ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
“இந்த தேவையற்ற தாமதத்தால் நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம். ஏனென்றால் பல ராணுவத்தில் பயிற்சி பெற்ற திருநங்கைகள் பெருமையாக நாட்டிற்கு சேவை செய்து வருகின்றனர். ராணுவ பணிகளை முடிக்க அவர்களுடன் திறன் இருக்கிறதா என்று பார்க்க வேண்டுமே தவிர அவர்களுடைய பாலினம் இல்லை” என்று மனித உரிமை பிரச்சாரம் தலைவர் ஸ்டீபென் பீட்டர்ஸ் தெரிவித்தார்.