August 12, 2017 தண்டோரா குழு
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் பல பகுதிகளில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் குடியரசு தலைவர் விடுமுறைக்காக நியூஜெர்சிக்கு சென்றுள்ளார். அமெரிக்க வெள்ளை மாளிகையின் West Wing-கில் தான், குடியரசு தலைவரின் முக்கியமான அலுவலக அறைகள் உள்ளது. தற்போது அவர் இல்லாத நிலையில், அந்த இடத்தில் புதுப்பிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அந்த பகுதியில் புதுப்பிக்கும் பணியை செய்யும் ஊழியர்கள், அங்கிருந்த பழைய மர சாமான்கள், ஏர் கோண்டிஷ்ணர், வெப்ப உபகரணங்களை அகற்றி விட்டு புதிய சாமான்களை வைத்துள்ளனர். அதேபோல், அங்குள்ள ஒழுகும் பைப்புகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. West Wing கீழ் பகுதியில் உள்ள Navy Mess Kitchen, தகவல் தொழில்நுட்ப அறை மேம்படுத்தல், மற்றும் West Wing-கிலிருந்து கீழே வர பயன்படுத்தப்படும் South Portico Steps ஆகியவை புதுப்பிக்கப்படுகிறது.
மேலும், அமெரிக்க குடியரசு தலைவருடன் செல்லாத West Wing ஊழியர்கள், தற்காலிகமாக வெள்ளை மாளிகைக்கு அடுத்துள்ள அலுவகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். புதுப்பிக்கும் பணி முழுமையாக முடிந்த பிறகு, அவர்கள் மீண்டும் தங்கள் பணியிடத்திற்கு திரும்புவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.