July 12, 2017
தண்டோரா குழு
பிரபல ஆன்லைன் நிறுவனமான அமேசான் தற்போது இந்தியாவில் உணவு மற்றும் மளிகை பொருட்களை விற்பனை செய்ய அனுமதி பெற்றுள்ளது.
பிரபல அமேசான் நிறுவனம் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் அதன் வியாபாரத்தை விரிவாக்கி கொண்டு வருகிறது. இதனால் அதன் போட்டியாளரான பிலிப் கார்ட் நிறுவனத்துடன் போட்டிபோட்டுக் கொண்டு இருக்கிறது.
வாடிக்கையாளர்களை ஈர்க்க உடை, ஸ்மார்ட் போன் மற்றும் இதர பொருட்களை விற்பனை செய்து வந்தது. ஆனால், தற்போது இந்தியாவில் உணவு மற்றும் மளிகை விற்பனை செய்ய அனுமதி பெற்றுள்ளது. இந்திய அரசிடமிருந்து அனுமதி பெற்றதை அந்த நிறுவனம் உறுதி செய்துள்ளது.
அமேசான் நிறுவனம் உணவு பிரிவில் சுமார் 5௦௦ மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது என்றும் அதுவும் ஏற்கனவே இந்தியாவில் 5 மில்லியன் டாலருக்கு மேலாக முதலீடு செய்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அமேசான் நிறுவனம் உணவு பொருட்களை அமேசான் பான்ட்ரி வழியாக இந்தியாவிற்கு அனுப்பி வருகிறது. இந்தியாவின் பிக் பசார், ஸ்டார் பசார் மற்றும் ஹைபெர்சிட்டி ஆகியோருடன் இணைந்து “Amazon Now” செயலி மூலம் மளிகை பொருள்களை விநியோகம் செய்து வருகிறது.
ப்ளிப்கார்ட் நிறுவனத்துடன் டைகர் குளோபல், டெண்சென்ட் ஹோல்டிங் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்கள் உணவு மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்தனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.