June 5, 2017 தண்டோரா குழு
அமைச்சர்களுக்கு யாரிடம் பயம் என்பது விரைவில் தெரியும்என அதிமுக துணைப் பொதுசெயலாளர்டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இரட்டை இலை சின்னத்தை மீட்க லட்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யபட்ட அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று முன்தினம் ஜாமீனில் வெளிவந்தார். இதனைத் தொடர்ந்து அவர் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை இன்று தனது மனைவியுடன் சென்று சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கட்சியில் இருந்து, என்னை ஒதுங்க சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை,” அமைச்சர்கள் ஏதோ பயத்துடன் உள்ளனர். அவர்களுக்கு யாரிடம் பயம் என்பது விரைவில் தெரியும். கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற தொண்டர்கள் என்னை அழைக்கிறார்கள். எடப்பாடி தலைமையிலான ஆட்சிக்கு என்னால் எந்த பாதிப்பும் வராது.கட்சியின் பொதுச்செயலாளர் அறிவுரையை ஏற்று செயல்படுவேன்.
அதற்காகவே இங்கு வந்துள்ளேன்” என்று கூறினார். மேலும், வானளாவிய அதிகாரம் படைத்த அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட சில அமைச்சர்கள் கூறுவது சரியல்லை,இரண்டு அணிகளும் இணைய கடந்த 45 நாட்களாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மேலும், 60 நாட்கள் வாய்ப்பு கொடுப்போம் என சசிகலா கூறியுள்ளார். அதுபடி செயல்படுவோம்.
இவ்வாறு தினகரன் கூறினார்.