April 18, 2017 தண்டோரா குழு
இந்திய குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் அமைச்சர்கள் ஆற்றும் உரை இந்தி மொழியில் இருக்க வேண்டும் என்ற பாராளுமன்ற குழுவின் பரிந்துரையை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஏற்றுக்கொண்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஆட்சி காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. அவருக்கு பிறகு வரும் குடியரசுத் தலைவர் இந்தி மொழியில் தான் தனது உரையை நிகழ்த்துவார் என்றும் கருதப்படுகிறது.
இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்களில் இந்தி மொழியை பயன்படுத்தவும், இந்தி செய்தித்தாள் மற்றும் பத்திரிக்கைகளை வாசிக்க விரும்பும் பயணிகளுக்கு விமானங்களில் தர வேண்டும். அனைத்து சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும் மற்றும் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் 8 முதல் 1௦ வகுப்பு வரை இந்தி மொழி கட்டாயமான பாடமாக இருக்க வேண்டும் என்னும் பரிந்துரையை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார்.
அரசு வேலைவாய்ப்பு கிடைக்க இந்தி மொழி கட்டாயம், பொது பங்குதாரர் நிறுவனங்கள் மற்றும் அனைத்து தனியார் நிறுவங்கள் தங்கள் தயாரிப்பு தகவல்களை வழங்க கட்டாயம் இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்ற பரிந்துரையை அவர் நிராகரித்துள்ளார்.