August 12, 2017 தண்டோரா குழு
தமிழக பள்ளிக்கல்வித் துறை செயல்பாடுகள் குறித்து விவாதம் நடத்துவதற்காக அமைச்சர் செங்கோட்டையனுக்காக அன்புமணி ராமதாஸ் காத்துக்கொண்டிருக்கிறார்.
தமிழக பள்ளிக்கல்வித் துறை செயல்பாடுகள் குறித்து விவாதம் நடத்த தயாரா என்று அன்புமணியிடம் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் சவால் விடுத்திருந்தார்.அந்த சவாலை ஏற்று அவருடன் எந்த நேரத்திலும்,எந்த இடத்திலும் விவாதம் நடத்தத் தயாராக இருப்பதாக பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி அறிவித்து இருந்தார்.
இதற்காக நாளையும் இடத்தையும் அறிவித்த அன்புமணி, அமைச்சர் செங்கோட்டையனை,சென்னை ராஜா அண்ணாமலைபுரம், முத்தமிழ் பேரவைக்கு ஆகஸ்ட் 12-ம் தேதி (இன்று) மாலை 4.45 மணிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். ஆனால்,இந்த அழைப்பை செங்கோட்டையன் நிராகரித்ததுள்ளார்.
இது குறித்து அன்புமணி ராமதாஸ் கூறும்போது,
அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக் கொண்டபடி 12.08.2017மாலை 4 மணி முதல் 5 மணி வரை விவாதம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில் இந்த விவாதம் நடைபெறும். இந்த அழைப்பு ஏற்று இவ்விவாதத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்க வேண்டும் என்று அழைக்கிறேன் கூறியுள்ளார்.
மேலும், செங்கோட்டையன் பள்ளி கல்வித்துறை விஷயங்கள் மட்டுமல்லாமல் தேவையில்லாத வேறு சில விஷயங்கள் குறித்தும் பேசியுள்ளார். அது குறித்தும் விவாதிக்க நான் தயார் எனக் கூறியுள்ளார்.
அன்புமணியின் அழைப்பை ஏற்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வருவாரா?