August 3, 2017
தண்டோரா குழு
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜரானார்.
தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகள்,அலுவலகங்கள் மற்றும் குவாரிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இது குறித்து அவர் வருமான வரித்துறை அதிகாரிகள் முன்பு ஏற்கனவே நான்கு முறை ஆஜராகி விளக்கமளித்தார். இதனிடையே அமைச்சரின் சொத்துகளை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கினர்.
இந்நிலையில், இன்றுஅமைச்சர் விஜயபாஸ்கர் ஐந்தாவது முறையாக வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.