• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அம்பாள் ஆட்டோ மாருதி சுசூகி நெக்ஸா ஷோ ரூமில் சுசூகியின் கிராண்ட் விட்டாரா எஸ்.யு.வி ரக கார் அறிமுகம்

September 15, 2022 தண்டோரா குழு

கோவையில் கார்கள் விற்பனையில் 24 வருடமாக முன்னணியில் உள்ள அம்பாள் ஆட்டோ நிறுவனத்தின் அவினாசி ரோடு பீளமேடு பகுதியில் உள்ள மாருதி சுசூகி நெக்ஸா கிளையில் மாருதி சுசூகியின் கிராண்ட் விட்டாரா எஸ்.யு.வி ரக சொகுசு கார் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதனை சார்பேட்டா, குக் வித் கோமாளி புகழ் நடிகர் சந்தோஷ் பிரதாப் அறிமுகம் செய்து வைத்தார்.இதன் அறிமுக நிகழ்ச்சியில் அம்பாள் ஆட்டோ துணைத் தலைவர் அனீஸ் முத்துசாமி கலந்து கொண்டார்.

இந்த புதிய ரக கார் குறித்து அனீஸ் முத்துசாமி கூறுகையில்,

கொங்கு மண்டலத்தில் முதன்முதலாக மாருதி சுசூகியின் கிராண்ட் விட்டாரா புதிய மாடலை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். மாருதி சுசூகியின் கிராண்ட் விட்டாரா எஸ்.யு.வி ரக சொகுசு காரானது அழகிய தோற்றத்துடன் அதிக இடவசதி உடன் ஐந்து பேர் வரை பயணிக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு எலக்ட்ரிக் பெட்ரோல் கார் ஆகும்.
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 28 கிலோமீட்டர் வரை மைலேஜ் கிடைக்கும் என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.

மேலும் 360 டிகிரி கேமராவுடன் சன் ரூஃப் ஆகியவை இதில் சிறப்பம்சம் ஆக பார்க்கப்படுகிறது.மாருதி சுசூகி கிராண்ட் விட்டாராவின் டாப் எண்ட் மாடல்களில் 40 கிலோ மீட்டர் வேகம் செல்லும் வரை எலெக்ட்ரிக்கால் இயங்கும்படியும் 40 கிலோ மீட்டருக்கு மேல் பெட்ரோல் மூலமாக இயங்கும்படியும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆகையால் இதனை தனியாக சார்ஜ் செய்ய தேவையில்லை. ஆட்டோமேட்டிக் ஆக ரீ சார்ஜ் ஆகும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுவரை 100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த மாத இறுதியில் இதன் விற்பனை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க