June 24, 2022 தண்டோரா குழு
கோவை போத்தனூர் பஞ்சாயத்து அலுவலக வீதியில் பொதுமக்களிடம் தண்ணீர் விநியோகம், தண்ணீரின் அழுத்தம் மற்றும் தரம் குறித்து மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கேட்டறிந்து ஆய்வில் ஈடுபட்டார்.
மேலும் அப்பகுதியிலுள்ள மழைநீர் கால்வாயை சுத்தம் செய்ய சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.தொடர்ந்து அப்பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கமிஷனர் உத்தரவீட்டார்.
பின்னர் வார்டு எண் 100க்குட்பட்ட பகுதியிலுள்ள அம்மா உணவகத்தில் ஆய்வில் ஈடுபட்டார். அப்போது அங்கு தயாரிக்கப்படும் உணவுகள் சுகாதாரமான முறையில் உள்ளதா? தரமான உணவுகள் வழங்கப்படுகிறதா? உணவுப் பொருட்கள் இருப்பு குறித்த பதிவேடுகளையும் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து உக்கடம் கழிவு நீர் பண்ணையில் அமைந்துள்ள கழிவு நீர் கத்திகரிப்பு நிலையத்தினை பார்வையிட்ட அவர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படும் நீரின் தரம் குறித்து சோதனை மேற்கொண்டார்.பின்னர் கழிவுநீர் கத்திகரிப்பு நிலையத்தினை தூய்மையாக பாரமரித்திட வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து உக்கடம் புல்லுக்காடு பகுதியில் 4.6 மெகாவாட் திறன் மின் உற்பத்தி செய்யும் சோலார் உற்பத்தி மையத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.இந்த ஆய்வின்போது துணை மேயர் வெற்றிசெல்வன், தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.