February 4, 2025
அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தின் பொறியியல் பள்ளி, கோயம்புத்தூர், கார்ப்பரேட் மற்றும் தொழில்த் தொடர்புகள் (CIR), இயந்திர பொறியியல் துறை, ஆட்டோமொட்டிவ் டெஸ்ட் சிஸ்டம்ஸ் (ATS), மற்றும் SAEINDIA கல்லூரி கிளப்புடன் இணைந்து, நிலைத்துணைவான போக்குவரத்து குறித்த இரு நாள் பணிக்கூடத்தை வெற்றிகரமாக நடத்தியது. இதன் தொடர்ச்சியாக, நவீன தொழில் நுட்பம் கொண்ட e-மொபிலிட்டி சோதனை மையம் திறக்கப்பட்டது.
இந்நிகழ்வில் முக்கிய தொழில்த் தலைவர்கள் மற்றும் கல்வித் துறையின் முன்னணி நிபுணர்கள் பங்கேற்றனர். இதில் டாக்டர் சசங்கன் ராமநாதன், பொறியியல் கல்லூரியின் டீன், மற்றும் அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தின் முதன்மை இயக்குநர் & தலைவர், பேராசிரியர் திரு சி. பரமேஸ்வரன் அவர்கள், ஆகியோர் அம்ருதாவின் நிலைத்துணைவான போக்குவரத்து தொடர்பான ஆராய்ச்சி மற்றும் தொழில் கல்வியில் ஒத்துழைப்புக்கான உறுதிப்பாட்டை முன்னிறுத்தினர்.
அம்ருதா ஆட்டோமொட்டிவ் ஆராய்ச்சி மற்றும் சோதனை மையத்தின் (AARTC) பத்து வருட பயணத்தை நினைவு கூறும் வகையில், ATS-யின் நிர்வாக இயக்குனர், திரு இராமநாதன் ஸ்ரீனிவாசன் அவர்கள், கூறுகையில்: “நாங்கள் 2015ஆம் ஆண்டு AARTCயை பவர்டிரெயின் சோதனை குறித்த ஆராய்ச்சிக்கு மையமாக வைத்து தொடங்கினோம். காலப்போக்கில், எமிஷன் சோதனை, NVH, மற்றும் சாலை சுமை தரவுச் சேகரிப்பு போன்ற மேம்பட்ட துறைகளிலும் முன்னேறியுள்ளோம். இன்றோ, EV ஆய்வகம், ADAS சிமுலேஷன் ஆய்வகம், மற்றும் பேட்டரி சோதனை மையத்தை தொடங்கியுள்ளோம். இந்த முன்முயற்சி, முன்னணி தொழில்துறை திட்டங்களை ஆதரிப்பது மட்டுமல்லாமல், புதிய போக்குவரத்து தொழில் நுட்பங்களில் மாணவர்களும், உறுப்பினர்களும் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கும் வழிவகுக்கும்.”
இருநாள் பணிக்கூடம் நிலைத்துணைவான போக்குவரத்து தொடர்பான முக்கிய முன்னேற்றங்களை ஆராய்ந்து, மின்சார வாகனங்கள் (EVs), மென்பொருள் வரையறுக்கப்பட்ட வாகனங்கள் (SDVs), மற்றும் ஹைட்ரஜன், அமோனியா போன்ற மாற்று எரிபொருட்களைக் குறித்த ஆழமான கண்ணோட்டத்தை வழங்கியது.
இந்த அமர்வுகளில் EV மோட்டார் வடிவமைப்பு, பேட்டரி மேலாண்மை அமைப்புகள், தனிச்சையாக இயக்கப்படும் வாகன தொழில் நுட்பங்கள், மற்றும் ஹைட்ரஜன் எஞ்சின்கள் போன்ற முன்னணி தலைப்புகள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.
பங்கேற்பாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட AARTC-யை நேரில் பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது. இந்த மையம் இப்போது EV பவர் ட்ரெயின் மற்றும் பேட்டரி சோதனை மற்றும் ADAS மேம்பாடு உள்ளிட்ட முன்னணி வசதிகளை வழங்குகிறது.
2015ஆம் ஆண்டில் ATS உடனான கூட்டாண்மையில் நிறுவப்பட்ட AARTC, உயர் தாக்கம் செலுத்தும் ஆராய்ச்சி மற்றும் தொழில் ஒத்துழைப்புக்கான மையமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இது மாணவர்களுக்கு தொழில்துறை சார்ந்த நேரடி பயிற்சியும், உன்னதமான ஆட்டோமொட்டிவ் தொழில் நுட்பங்களில் தொழில் வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது.