October 16, 2023 தண்டோரா குழு
கோவை காந்திபுரம் பகுதியில் வரமகாலட்சுமி சில்க்ஸ் கடையின் 56வது கிளை இன்று துவங்கப்பட்டது.இதனை நடிகை ஸ்ருதி ஹாசன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
பின்னர் இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.கோவை வருவதற்கு எனக்கு மிகவும் பிடிக்கும் என்றார்.பட்டு சேலைகள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்த அவர் நான் வழக்கமாக traditional ஆக துணி உடுத்த மாட்டேன்,அவ்வாறு உடுத்தினால் எனக்கு பட்டு தான் பிடிக்கும் என்றார்.
நான் வழக்கமாக கருப்பு நிற உடை, மார்டன் உடை தான் அணிவேன், ஆனால் புடவை அணிந்தால் positive feeling வரும் என கூறினார். எனக்கு பெரும்பாலும் எனது தந்தை தான் புடவைகளை பரிசளித்திருப்பார்,ஆனால் அவர் பெரும்பாலும் மஞ்சள் வெள்ளை நிறத்தில் புடவை எடுப்பார் நான் அவரிடம் கருப்பு அல்லது கருநீலம் நிறத்தில் புடவைகள் எடுத்து தரும்படி கேட்பேன் என்றார்.
படங்களை பொறுத்தவரை நானும் ஒரு தமிழ் பெண் தான் தமிழ் படங்களில் கண்டிப்பாக நடிப்பேன் எனவும் கூடிய விரைவில் எனது ஆல்பம் பாடலை எதிர்பார்க்கலாம் என்றார். பெரிய பட்ஜெட் சிறிய பட்ஜெட் என்றில்லாமல் அழகான கதையை மக்களுக்கு கொடுக்க வேண்டும் எனவும் கூறினார்.அவரிடம் அப்பாவை வைத்து படம் இயக்குவதை எதிர்பார்க்கலாமா என்ற கேள்விக்கு ஐயையோ என தலை சுற்றுவது போல் பதிலளித்தார்.
மேலும் அப்பாவிடம் யாரும் competition வைக்க முடியாது எனவும் தெரிவித்தார். அரசியல் ஈடுப்பாடு குறித்த கேள்விக்கு இல்லை என பதிலளித்தார். தற்போது ஒரு ஹாலிவுட் படத்தில் இந்திய பெண் கதாபாத்திரத்தை எடுத்து நடித்திருப்பது மிகவும் பெருமை அளிக்கிறது எனவும் அதுமட்டுமின்றி அந்த படத்தில் இயக்குநர், தயாரிப்பாளர்,வசன கர்தா அனைவருமே பெண்கள் என்பதால் அது போன்ற ஒரு குழுவுடன் இணைந்தது மிகவும் அழகான ஒன்றாக அமைந்துள்ளது என்றார்.
இந்திய திரைப்படங்களுக்கும் ஹாலிவுட் திரைப்படங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை மொழி மட்டுமே மாறுகிறது என கூறினார். மேலும் வாய்ப்பு இருந்தால் விஜய் அஜித் அனைவருடனும் நடிப்பேன் என்றார்.