September 23, 2021 தண்டோரா குழு
சூலூர் அருகே அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தனிநபர் பொது வழித்தடத்தை ஆக்கிரமிப்பு செய்து பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சிந்தாமணி புதூரில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது இந்த சார்பதிவாளர் அலுவலகம் செயல்படும் கட்டிடத்திற்கு சொந்தக்காரர் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பாக சார்பதிவாளர் அலுவலகத்திற்கு பின்பாக உள்ள இடத்தை வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்துள்ளார்.
மேலும் பதிவாளர் அலுவலகம் அருகே உள்ள இடத்தை பொது வழித்தடமாக பிரித்து அந்த வீட்டுமனை இடங்களை விற்பனை செய்துள்ளார். இந்நிலையில் கடந்த பத்தாண்டுகளாக வழித்தடத்தில் பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் இருந்து வருவதாகவும் அந்த வழித்தடத்தை அந்த நபர் பயன்படுத்த முடியாமல் ஆக்கிரமிப்பை செய்துள்ளதாக அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து வட்டாட்சியர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளனர் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரியும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த வழித்தடத்தை அந்த நபர் விற்பனை செய்வதற்காக சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள அலுவலர்களை கையில் வைத்துக்கொண்டு விற்பனை பட்டா மாறுதல் செய்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஏற்கனவே 2017 ஆம் ஆண்டு இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ள நிலையில் இது போன்ற செயலில் அந்த நபர் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர்.