March 12, 2022
தண்டோரா குழு
கோவை மாவட்டம் பொன்னாங்கானி இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ராமு என்பவர் உயிரிழந்தார். அவரது இல்லத்திற்கு தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் அருண் ஹல்டர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசு அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அரசியல் அமைப்புகள், இயக்கங்கள், கட்சியினர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் பல்வேறு அமைப்புகள் கட்சிகள் இயக்கங்களை சார்ந்தவர்கள் தாழ்த்தப்பட்டோர் சமூகத்தை சேர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ஆகியவை அவரிடம் தெரிவிக்கப்பட்டு கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது.