• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சமாக 30% ஊதிய உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு

October 11, 2017 தண்டோரா குழு

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார்.

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை நடந்தது. இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் 7 வது ஊதியக்குழு பரிந்துரையை ஏற்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. இதனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்களின் சம்பளத்தை 20 சதவீதம் உயர்த்தி வழங்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து,முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார்.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில்,

அரசு ஊழியர்களின் சம்பளம் 2.57 மடங்கு அதிகரிக்கப்படுகிறது. குறைந்தபட்ச சம்பளம் ரூ.6.100லிருந்து ரூ.15,700 ஆகவும், அதிகபட்ச சம்பளம் ரூ.77 ஆயிரத்திலிருந்து ரூ.2.25 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது. இந்த சம்பள உயர்வு 2016ம் வருடத்தை கருத்தியலாக,1.10.17 முதல் பணபயனுடன்அமல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

அதைபோல், பென்சன் மற்றும் குடும்ப பென்சன்தாரர்களுக்கும் 2.57 மடங்கு பென்சன் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறைந்தபட்ச பென்சன் ரூ.7,850 ஆகவும், அதிகபட்ச பென்சன் ரூ.1,12,500 மற்றும் குடும்ப பென்சன் 67,500ஆகவும் இருக்கும். மேலும், ஓய்வு பெறும் போது வழங்கப்படும் பணிக்கொடைக்கான அதிகபட்சவரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம பஞ்சாயத்து செயலர் மற்றும் அனைத்து துறைகளில் பணியாற்றும் சிறப்பு காலமுறை சம்பளம் பெறும் பணியாளர்களுக்கு குறைந்த பட்ச சம்பளம் ரூ. 3 ஆயிரமாகவும், அதிகபட்ச சம்பளம் ரூ.11 ஆயிரமாகவும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு ரூ.14,719 கோடி கூடுதல் செலவு ஏற்படும். இதனை அரசே ஏற்று கொள்ளும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

மேலும் படிக்க