April 18, 2017 தண்டோரா குழு
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்குமத்தியதகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம்“டிஜிட்டல்” உரிமம் வழங்கியுள்ளது.
கடந்த 2007 ம் ஆண்டு தமிழக அரசு குறைந்த செலவில் கேபிள் டி.வி. வழங்குவதற்காக, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை தொடங்கியது.இதைத்தொடர்ந்து 2012 ம் ஆண்டு தமிழக அரசு டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்தது.ஆனால்விண்ணப்பத்தின் மீது எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை.
இந்நிலையில், தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் வழங்கி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் மாநில அரசின் நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் வழங்கப்படுவது இது முதல்முறையாகும்.
இதன் மூலம் குறைந்த செலவில் உலக தரம் வாய்ந்த சேவையில் 90முதல் 100 சேனல்களை காணலாம்.
மேலும், அரசு கேபிள்களுக்கு டிஜிட்டல் உரிமம் வழங்கிய பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிநன்றி தெரிவித்துள்ளார்.