July 14, 2017
தண்டோரா குழு
ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி சென்ற அரசுப் பேருந்து தீடீரென தீ பற்றி எரிந்து சாம்பலானது. ஓட்டுனரின் துரித செயலால் பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்.
ஈரோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பகுதி அருகே அரசு பேருந்து வந்து கொண்டிருந்த போது பேருந்தின் முன்பக்கத்தில் தீடீரென தீ எரியத் தொடங்கியது.
இதனையடுத்து ஓட்டுனர் பேருந்தை நிறுத்திவிட்டு பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.இதனால் அந்த பேருந்தில் பயணம்செய்த 37 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக கீழே இறங்கி உயிர் தப்பினர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைப்பதற்குள் முற்றிலும் பேருந்து எரிந்து சாம்பலானது.