January 19, 2018 தண்டோரா குழு
தமிழகம் முழுவதும் இயங்கும் அரசு பேருந்து கட்டணங்களை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகம் முழுவதும் இயங்கும் அரசு பேருந்து கட்டணங்களை உயர்த்தி தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி வெளியூர் பேருந்துகளில் கட்டணம் 20 சதவீதம் உயர்த்தப்படுகிறது. சாதாரண பேருந்துகளில் 10 கி.மீ வரை ரூ.5 ஆக உள்ள கட்டணம் ரூ.6 ஆகிறது. 30 கி.மீ வரை ரூ.17 ஆக உள்ள விரைவுப் பேருந்து கட்டணம் ரூ.24 ஆக உயருகிறது.
அதைபோல் குளிர்சாதன பேருந்தில் 30 கி.மீ-க்கான கட்டணம் ரூ.27-லிருந்து ரூ.42-ஆக உயர்த்தப்படுகிறது.அதிநவீன சொகுசுப் பேருந்தில் 30 கி.மீ-க்கு ரூ.21-லிருந்து ரூ.33-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.மாநகரப் பேருந்துகளில் இனி குறைந்தபட்ச கட்டணம் ரூ.5-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநகரப் பேருந்தில் 20-வது நிலைக்கு கட்டணம் ரூ.12லிருந்து ரூ.19 ஆகிறது.28 நிலைகள் கொண்ட தொலைவிற்கு பேருந்து கட்டணம் ரூ.14-லிருந்து ரூ.23-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதி சொகுசு இடைநில்லா பேருந்து கட்டணம் 30 கி.மீ-க்கு ரூ.18லிருந்து ரூ.27-ஆக உயர்கிறது. வோல்வோ பேருந்தில் கட்டணம் 30 கி.மீக்கு ரூ.33-லிருந்து ரூ.51-அக உயர்கிறத. இந்த கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் என அரசு அறிவித்துள்ளது.
மேலும், தனியார் பஸ்களுக்கும் இந்த பஸ் கட்டண உயர்வு பொருந்தும் என்றும் தொழிலாளர் ஊதிய உயர்வு, ஒய்வூதிய ஊதிய உயர்வு , எரிபொருள் விலை உயர்வு , பராமரிப்பு செலவு உள்ளிட்ட , தவிர்க்கமுடியாத காரணங்களுக்காக பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பி்ல் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.