March 14, 2016 வெங்கி சதீஷ்
பொள்ளாச்சி திருப்பூர் ரோட்டில் அரசு பேருந்தும், சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதல் – 2 குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழப்பு -சாலை ஓரம் கிணறு தோண்டும் இயந்திரத்தால் ஏற்பட்ட புகை மூட்டமே விபத்துக்கு காரணம் என தகவல்.
பொள்ளாச்சியில் இருந்து தென்னை நார் ஏற்றி கொண்டு திருப்பூர் சென்ற லாரியும் திருப்பூரில் இருந்து 43 பயணிகளை ஏற்றி வந்த அரசுப்பேருந்தும் கருமாபுரம் பிரிவு அருகே நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
மோதல் காரணமாக அங்கு பலத்த சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் பதறியடித்து சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் இறங்கினர். பின்னர் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை காவல்துறையினர் மீட்டனர்.
ஆனால் பேருந்தில் இருந்த 4 வயது மற்றும் 7 ஏழு மாத குழங்தைகள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். பின்னர் பலத்த காயமடைந்த மற்ற பயணிகள் மற்றும் லாரி ஓட்டுனரையும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் லாரி ஓட்டுனர் உள்ளிட்ட மேலும் 4 பேர் உயிரிழந்தனர்.
பலத்த காயமடைந்த மற்ற பயணிகள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மற்றும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து நெகமம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
கருமாபுரம் பிரிவில் சாலை ஓரம் கிணறு தோண்டும் இயந்திரத்தினால் ஏற்பட்ட புகை காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று காலவல்துறையின் முதல்கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.