December 21, 2016
தண்டோரா குழு
அரபிக் கடலில் நிறுவப்போகும் மாமன்னர் சத்ரபதி சிவாஜியின் உருவச் சிலை உலகிலேயே மிக பெரிய நினைவுச் சின்னமாக இருக்கும் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2௦) தெரிவித்தார்.
தானே மாநிலத்தில் ஷஹபூர் என்னும் இடத்தில் குன்பி மரம் நடுவிழாவில் அவர் பேசியதாவது:
அரபிக் கடலில் நிறுவப்பட இருக்கும் சத்ரபதி சிவாஜியின் உருவச் சிலை இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே மிகப் பெரிய நினைவுச் சின்னமாக இருக்கும். இந்தப் பணியை மேற்கொள்வதற்கு உதவிய பிரதமர் நரேந்திர மோடிக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஷஹபூர் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் 2௦௦ கோடி ரூபாய் செலவில் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்படும். ஷஹபூர் மற்றும் முர்பாத் ஆகிய இடங்களைச் சுற்றுலாத் தலமாக மாற்ற தானே ஜில்லா பரிஷதுக்கு உத்தரவிட்டுள்ளேன். அதற்குத் தேவையான நிதியும் விரைவில் ஒதுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.