January 25, 2022 தண்டோரா குழு
அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு- மாணவியின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டு இந்து முன்னனியினர் கண்களை கட்டி கொண்டு தீபம் ஏந்தி போராட்டம் நடந்தினர்.
அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் பயின்ற பள்ளியில் தன்னை கிறிஸ்தவ மதத்திற்கு மாற கட்டாயப்படுத்தியதாகவும் தன்னை துன்புறுத்தியதாகவும் அவர் வீடியோ ஒன்று வெளியானது.இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் மாணவியை மதமாறத்திற்கு கட்டாயப்படுத்திய பள்ளியின் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் இதற்கு சிபிஐ விசாரணை வேண்டியும் பல்வேறு இந்து அமைப்புகள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவையில் காந்திபுரம் பகுதியில் உள்ள சித்தி வினாயகர் கோவில் முன்பு இந்து முன்னனியின் அன்னையர் முன்னணி அமைப்பினர் மாணவியின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டும் இந்த வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டியும் தீபம் ஏந்தி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
மாவட்ட தலைவர் தசரதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வரிசையாக கையில் தீபம் ஏந்தியும் கண்டன பதாகைகளை ஏந்தியும் கண்ணில் கருப்பு துணி கட்டி கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
இந்து முன்னனி கோட்ட செயலாளர் சிவக்குமார் சிறப்புரையாற்றினார். இதில் கோட்ட பேச்சாளர் கிருஷ்ணன், மாவட்ட பொது செயலாளர் ஜெய்சங்கர், மாவட்ட செயலாளர் ஆறுசாமி, மகேஷ்வரன், ஆனந்த் செய்தி தொடர்பாளர் தனபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.