April 19, 2017 தண்டோரா குழு
அருணாச்சலபிரதேச மாநிலத்தின் ஆறு ஊர்களின் பெயர்களை சீனா மாற்றி அமைத்துள்ளது.அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத் என்று சீனா அழைத்து வருகிறது.
இந்நிலையில், அருணாச்சல பிரதேச மாநிலத்தின் ஆறு ஊர்களின் பெயர்களை சீனா அரசு திடீரென மாற்றியமைத்துள்ளது. தங்கள் நாட்டு பாரம்பரியப்படி பெயர்கள் மாற்றப்பட்டுள்ளதாக சீன உள்விவகாரத் துறை தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையில் எந்த தவறும் இல்லை என சீனா விளக்கமளித்துள்ளது.
ஏற்கனவே தங்களுக்கு சொந்தமான அருணாச்சல பிரதேசத்தை இந்தியா ஆக்கிரமித்து வைத்துள்ளதாக சீனா பல ஆண்டுகளாக குற்றம்சாட்டி வருகிறது. தலாய்லாமாவின் அருணாச்சல பிரதேச பயணம் சீனாவுக்கு ஆத்திரமூட்டியிருந்த நிலையில் இந்த பெயர் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.