November 14, 2022 தண்டோரா குழு
பேரூர் கோளூர் அணை என்ற அருள்மொழி தேவ சதுர்வேதி மங்கல அணைமேட்டில் அணைமடை கருப்பன் கோவில் ராஜ ராஜ வாய்க்காலுக்கும் தெற்கும்,கோளூர் அணைக்கு வடக்கு பகுதியில் அமையந்துள்ள வெள்ளிங்கிரி தல வரலாறு 1919 வது கல்வெட்டுபடியும், முட்டம் திருநாகேஸ்வரம் கோவில் கல்வெட்டின்படி அனமந்துள்ள கருப்பன் திட்டிலிருந்து, தாய் பிடி மண் எடுத்து வந்து,மடத்தூர் எனும் பூசாரிபாளையத்தில் அருள்மிகு ஶ்ரீ கருப்பராயன் கோவில் அமைத்து இன்று வரை ஊர் சபை குடும்ப சபை மகாசபை அனைத்தும் அமைத்து வழிபாடுகள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இக்கோவில் பணிகள் புணரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. கோவில் மகா மண்டபத்தில் அழகிய நான்கு தூண்கள் கதவுகள் நிலவு செய்யப்பட்டது மூன்று நிலை ராஜகோபுரம், 11அடி பிரமாண்டமான முனீஸ்வரர் அர்த்தமண்டபத்தில் இரண்டு துவார பாலகர்கள் அமைக்கப்பட்டு வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றது.. பணிகள் நிறைவு பெற்று வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து ஊர் பொதுமக்கள் மற்றும் கோவில் கமிட்டியினரின் ஆலோசணை கூட்டம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் திருமுறை ஆகம வித்தகர் முனைவர் இராஜேந்திர சிவம் அர்ச்சகர் பேசினார்.
அப்போது அவர்,கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி பிப்ரவரி 9 ந்தேதி வாஸ்து சாந்தியுடன் புண்ணிய நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட 1008 தீர்த்தக்குடங்கள் கொண்டு ஊர்வலமாக எடுத்து வர உள்ளதாகவும்,, மேலும் கோபுர கலசம் வைத்தல், முதல் கால,இரண்டாம் கால உள்ளிட்ட வேள்வி பூஜைகளுடன் மிக சிறப்பாக கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.