February 10, 2017 தண்டோரா குழு
நியூயார்க் நகரின் கென்னெடி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஒரு விமானத்தின் என்ஜினில் திடீரென்று தீ ஏற்பட்டதாக விமான எச்சரித்தார். இதனால் பெரிய விபத்து நேராமல் பயணிகள் காப்பாற்றப்பட்டனர். இந்தத் தீ விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நியூயார்க் நகரிலிருந்து அர்ஜன்டினா ஏர்லைன்ஸ் விமானம் அர்ஜன்டினா நாட்டில் உள்ள புயோனஸ் ஏரஸ் நகருக்குப் புறப்பட்டது. அப்போது விமானத்தின் இயந்திர தீ ஏற்பட்டதாக விமான தரைக் கட்டுப்பாட்டு நிலையத்திற்கு எச்சரிக்கை கொடுத்துவிட்டு, விமானத்தை நிறுத்தினார்.
இச்சம்பவம் வியாழன் நள்ளிரவுக்குப் பின்னர் நடந்தது.
“எனினும் அங்கு தீ ஏற்பட்டதற்கான அறிகுறி தென்படவில்லை” என்று நியூயார்க் மற்றும் நியூஜெர்சி விமானநிலைய செய்தித் தொடர்பாளர், ஸ்டீபன் கோலேமன் நிருபர்களிடம் கூறினார்.
தகவல் அறிந்தவுடன் மீட்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றன. அந்த விமானம் சோதனைக்காக விமான வாயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
அதில் இருந்த பணிகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. அவர்கள் வேறு விமானம் மூலம் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டடனர். இது தவிர வேறு தகவல்கள் இல்லை. இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளோம்.