November 26, 2022
தண்டோரா குழு
கோவையில் அர்ஜுன் தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நாளை நடைபெறவுள்ளது.
கோவை பொள்ளாச்சி மெயின் ரோடு கிணத்துக்கடவு தாமரைக்குளம் பகுதியில் உள்ள அர்ஜுன் தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நாளை நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும்,காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனத்தின் வேந்தருமான டாக்டர்.பி.மன்னர் ஜவஹர் மற்றும் ACP & HR வணிகத் தலைவர், இன்ஃபோசிஸ் லிமிடெட், நிறுவனர் & நிர்வாக அறங்காவலர் ஜே. சுஜித் குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்க உள்ளனர்.
காலை 10:30 மணிக்கு கல்லூரி வளாகத்தில் விழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.