April 17, 2017 தண்டோரா குழு
நவீன தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தால் புதிய பறக்கும் காரை ஏரோமொபைல் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.
நகரங்களில் அதிக போக்குவரத்து பிரச்சனை அதிகரித்துக்கொண்டு வருவதால், மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். பறக்கும் கார் தான் இந்த பிரச்சனைக்கு சரியான முடிவு என்று கருதப்படுகிறது.
2௦17ம் ஆண்டு ஏப்ரல் 2௦ம் தேதி மொனாக்கோ நாட்டின் ஸ்லோவாக்கின் ஏரோமொபைல் நிறுவனம் தனது முதல் பறக்கும் காரின் கருத்துப்படிவத்தை மார்குஸ் ஷோவில் அறிமுகப்படுத்தும். 2014ம் ஆண்டு ஆட்டோமொபில் பார்க்கும் கார் 3.௦ என்பதை அறிமுகப்படுத்தியது. ஆனால் தற்போது வெளியாகவுள்ள காரின் கருத்து படிவம் பல புதிய முன்னேற்றங்களை பெற்றிருக்கிறது.
புதிய ஏரோமொபைல் கார் வானிலும் சாலையிலும் பயணிக்கும் ஆற்றலுடையது. சாலையில் பயணிக்கும்போது 875 கிலோமீட்டர் வேகத்திலும், வானத்தில் பறக்கும்போது 7௦௦ கிலோமீட்டர் தூரத்தில் பயணிக்கும் திறனுடையது. மேலும், இதன் முழு விவரமும் ஏப்ரல் 2௦ம் தேதி கிடைக்கும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. 2௦18ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து இந்த வாகனம் விற்பனைக்கு வரும். இதனுடைய தொகையை அந்த நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.