September 22, 2017 தண்டோரா குழு
அமெரிக்காவில் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு முன்பு குழந்தைகளை அழைத்து செல்ல, புதிய முறையை ராடி குழந்தைகள் மருத்துவமனை அறிமுகம் செய்துள்ளது.
பொதுவாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமானால், அந்த நோயாளியை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்து செல்வது வழக்கம்.
அமெரிக்காவில் ராடி குழந்தைகள் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.இந்த மருத்துவமனையில் பல குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இங்கு அறுவை சிகிச்சைக்கு முன்பு குழந்தைகளை, ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் காரில் உட்கார வைத்து, அவர்களை அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்து செல்லும் புதிய முறையை அந்த மருத்துவமனை அறிமுகம் செய்துள்ளது.
“ராடி குழந்தைகள் மருத்துவமனையில் இருக்கும் இந்த கார்களை ஒரு செவிலியர் அல்லது ஒரு மருத்துவர் மூலம் இயக்கப்படுகிறது. குழந்தைகளை அந்த ரிமோட் கண்ட்ரோல் கார் மூலம், அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்து செல்லும்போது, குழந்தைகள் மகிழ்ச்சி அடைகின்றனர்” என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.