• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அழிவின் விளிம்பில் சிட்டுக்குருவிகள்?

March 20, 2023 சிராஜ் தீன்

சிட்டுக் குருவிகள் உருவத்தில் சிறியனவாகவும், இளம் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தி்லும் இருக்கும். சிறிய அலகு, சிறிய கால்களுடன் காணப்படும்.இவை 8 முதல் 24 செ.மீ நீளமுள்ளவை. பழுப்பு சாம்பல், மங்கலான வெள்ளை என்று பல நிறங்களில் காணப்படும். கூம்பு வடிவ அலகுகளைப் பெற்ற இவை 27 முதல் 39 கிராம் எடை கொண்டவை.

ஆண் பறவையில் இருந்து பெண் பறவை வேறுபட்டது. மேற்பாகம் தவிட்டு நிறத்தில் மஞ்சளும் கறுப்பும் கலந்த கோடுகள் கொண்டிருக்கும். அடிப்பாகம் வெளுப்பாக இருக்கும்.சிட்டுக் குருவி (Sparrow) முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினமாகும். சிட்டுக் குருவிகள் பசரீன்கள் குடும்பத்தைச் சார்ந்தவை.

இந்தியாவில்இவை வீட்டுக்குருவிகள், அடைக்கலக்குருவிகள் ,ஊர்க்குருவிகள், சிட்டுக்குருவிகள் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகின்றன.உருவத்தில் சிறியதாக , அழகான தோற்றம் கொண்ட, சுறுசுறுப்பாக பறக்கும் சிட்டுக்குருவிகள், காக்கைப்போல் , மனிதளின் பழக்க வழக்கத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு பழகும் அறிவுபூர்வமான உயிரினம் சுற்றுச் சூழல் மாற்றங்களால் நாம் ஏற்படுத்தும் பல இழப்புகளில் மரங்களும் பறவைகளும் உலகெங்கும் அழிந்தும், குறைந்தும் வருவதால் சுற்றுச் சூழல் சீர்கெட்டு உலகம் வெப்பமயமாக இயற்கைப் பேரழிவுகள் நேர்கின்றன.

தற்போது பல நகர்ப்புறங்களில் இவை அழிந்துவிட்ட , சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் சங்கர் தயாரிப்பில் வெளியாகி இருக்கு ” 2.0 ” திரைப்படம் இந்த திரைப்படத்தின் கூரும் முக்கிய கருத்து செல்போன் டவர்கள் அதிகரிப்பினால் வெளியாகும் கதிர் வீச்சால் பறவைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை பற்றிய மையக் கரு . அலைபேசியில் இருந்து வெளிவரும் (நுன்னலைகள்) மின்காந்த அலைகளின் தாக்கம் இந்த சிட்டுக் குருவியினத்தின் இனபெருக்க மணடலத்தை தாக்கி அவற்றை மலடாக மாற்றி விடுவதனால் இவற்றால் தங்களின் இனத்தை பெருக்க இயலவில்லை இது மட்டுமல்லாமல் , எரிவாயுக்களில் இருந்து வெளியேறும் மீதைல் நைட்ரேட் எனும் வேதியியல் கழிவுப் புகையால், காற்றும் மாசடைந்து குருவிகளை வாழ வைக்கும் பூச்சி இனங்கள் அழிகின்றன. இதனால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையால், நகருக்குள் வாழும் குருவிகள் பட்டினி கிடந்தே அழிகின்றன.

பலசரக்குக் கடைகளுக்குப் பதிலாக, பல்பொருள் அங்காடிகள் அதிகளவு வளர்ந்து வருகின்றன. இங்கு பாலிதீன் பைகளில் தானியங்கள் அடைத்து விற்கப்படுவதால், வீதிகளில் தானியங்கள் சிதற வாய்ப்பில்லை.

வீட்டுத் தோட்டங்கள், வயல்களில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி தெளித்து, பூச்சிகள் கொல்லப்படுகின்றன. இதன் காரணமாக , உணவு இல்லாமல் சிட்டுக் குருவிகள் மெல்ல நகரங்களைக் காலி செய்ய தொடங்கின .காடுகள், விவசாயம் அழிக்கப்பட்டதாலும், அதிகரித்து வரும் நவீன மயமாதலாலும், சுற்றுசூழல் கேடுகளாலும் ஏராளமான பறவைகள் மற்றும் விலங்கினங்களின் இருப்பிடம் அழிக்கப்பட்டு வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றன. தற்போது ஏராளமான செய்தித்தாள்களிலும்,

தொலைக்காட்சிகளிலும் ஊருக்குள் புகுந்து விலங்கினங்கள் அட்டகாசம், சிறுத்தை மற்றும் யானைகளால் பல உயிர் பலி போன்ற செய்திகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பறவை மற்றும் விலங்கினங்களின் வீடுகளை மனிதன் பறித்து கொண்டான், இதனால் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் விலங்கினங்கள் என்ன செய்யும்…?

குருவிகளை காக்கும் வழி:-

குறைந்த எண்ணிக்கையில் உள்ள சிட்டுக்குருவிகளை காக்கும் பொறுப்பு ஒவ்வொருவரிடமும் உள்ளது. சிறிய வீடாக இருந்தாலும், தோட்டம் அமைக்க வேண்டும். பயிர்கள், தாவரங்கள் மீது பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கக்கூடாது. குருவிகள் குடிக்க கிண்ணத்தில் தண்ணீர் வைக்க வேண்டும். வீட்டு முன், மொட்டை மாடியில் தானியங்களை தூவ வேண்டும். மண்பானையில் வைக்கோல் வைத்தால், குருவிகள் கூடு கட்ட பயன்படும்.

மேலும் படிக்க