June 29, 2017 தண்டோரா குழு
குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்துள்ளார்.
துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவிக்காலம், வரும் ஆகஸ்ட் 10ம் தேதியோடு முடிவடைகிறது. இதனையடுத்து துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும் தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.
இது குறித்து டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி கூறுகையில்,
லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்கள் குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வார்கள். ராஜ்யசபா செயலர், தேர்தல் நடத்தும் அதிகாரியாக செயல்படுவார்.
மேலும் குடியரசு துணைத்தலைவருக்கான தேர்தல் ஆகஸ்ட் 5-ல் நடைபெறும். இந்த பதவிக்கான வேட்பு மனுக்களை வருகிற ஜூலை 4ஆம் தேதி முதல் ஜூலை 18ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம். தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜூலை 19ஆம் தேதி நடைபெறுகிறது. ஜூலை 21ஆம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.