August 18, 2017 தண்டோரா குழு
உலக அமைதிக்கான நோபல்பரிசு வென்ற மலாலா யூசப் லண்டனிலுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்க இடம் கிடைத்துள்ளது.
உலக அமைதிக்கான நோபல்பரிசு வென்ற மலாலா யூசப், இங்கிலாந்தில் Edgbaston High Schoolல் கடந்த 2013ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை கல்வி பயின்றார்.பின்னர் மேல்படிப்பிற்காக, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று ஆர்வம் கொண்ட அவர்,அதற்கான விண்ணப்பத்தை அந்த பல்கலைக்கழகத்திற்கு அனுப்பியிருந்தார்.
தேர்வில் பல்கலைக்கழகத்தில் சேரத் தேவையான அளவுக்கு அவர் மதிப்பெண் பெற்றதால் அவருடைய இடம் உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சேர அவருக்கு அனுமதி அளித்துள்ளது.
இதுக்குறித்து மலாலா யூசப் கூறுகையில்,
“ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்க அனுமதி கிடைத்தது மகிச்சியை அளிக்கிறது.
தத்துவம், பொருளாதாரம் மற்றும் அரசியல் ஆகிய பாடங்களை படிக்க போகிறேன்” என்று தெரிவித்தார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்க மலாலாவுக்கு அனுமதி கிடைத்ததை பலர் தங்கள் ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட், முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி ப்ளேர் , பிரிட்டிஷ் மருத்துவ சங்கத்தின் முதல் பெண் தலைவர் ஜோஸ்ப்பின் பர்ன்ஸ், வேர்ல்ட் வைட் வெப்பை கண்டுப்பிடித்த சர் டிம் பெர்னேர்ஸ் லீ மற்றும் இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி போன்ற உலகத் தலைவர்கள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள்.தற்போது இந்த தலைவர்கள் பட்டியலில் மலாலா இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.