June 28, 2023 தண்டோரா குழு
நேபால் தலைநகர் காட்மண்டுவில் நடைபெற்ற ஆசிய அளவிலான கராத்தே போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ண பொறியியல் கல்லூரி மாணவர் கைலாஷ் வெள்ளி பதக்கம் பெற்று சாதனை புரிந்தார். ஆசிய கோஜு- ரியூ கராத்தே பெடரேசன் சார்பில் ஆசிய அளவிலான கோஜு-ரியூ கராத்தே போட்டி நேபாளத்தில் உள்ள காட்மண்டுவில் சமீபத்தில் நடைபெற்றது.
போட்டியில் 10 நாடுகளை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று சப் ஜூனியர் , கேடெட்,ஜூனியர்,சீனியர் என நான்கு பிரிவுகளில்,பல்வேறு எடை பிரிவுகளில் கீழ் போட்டியிட்டனர்.இந்தியா சார்பில் சுமார் 150 வீரர் வீராங்கனைகள் பல்வேறு மாநிலங்களில் இருந்து போட்டியிட்டனர். அதில் தமிழகத்தை சேர்ந்த 22 பேர் பங்கு பெற்றனர்.
ஜூனியர் பிரிவில் இறுதி சுற்றில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை முதலாம் ஆண்டு மாணவர் கைலாஷ் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
இவர் ஏற்கனவே மலேசியாவில் பேராக் இப்போவில் நடைபெற்ற பதினாறுவது ஓசினாவோ ஆசிய கோஜு- ரியூ கராத்தே ஓபன் சர்வதேச சேம்பியன்ஷிப் தங்கப்பதக்கம் பெற்றவர். மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் தேசிய மற்றும் மாநிலங்கள் சார்பில் நடைபெற்ற கராத்தே மற்றும் ஜூடோ போட்டிகளில் சுமார் 9 பதக்கங்கள் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சாதனை புரிந்த மாணவர் கைலாஷை எஸ். என். ஆர் சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் டி. லட்சுமி நாராயணசுவாமி, கல்லூரி முதல்வர் முனைவர் என் .ஆர் அலமேலு, உடற்கல்வி இயக்குனர்கள் நித்தியானந்தம் மற்றும் உமாராணி ஆகியோர் பாராட்டினார்கள்.