October 7, 2021 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் காந்தவயல், நம்பர் 24-வீரபாண்டி,மானார்,பரளி பில்லூர் அணை, மருதமலை, சீங்குபதி,சின்னம்பதி, மாவுத்தம்பதி, முட்டத்துவயல், ஆணைக்கட்டி, சேத்துமடை என 11 இடங்களில் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட துவக்கப்பள்ளிகள் உள்ளன. பாலமலை, வால்பாறை ஆகிய இடங்களில் 2 நடுநிலைப்பள்ளிகளும், மாவுத்தம்பதி, முட்டத்துவயலில் 2 உயர்நிலைப்பள்ளிகளும், ஆணைக்கட்டியில் ஒரு மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 16 பள்ளிகள் உள்ளன.
இந்த பள்ளிகளில் மொத்தம் 848 மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள். இதனிடையே ஆணைக்கட்டி அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட துவக்கப்பள்ளியில் கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அப்போது இவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும் பள்ளியில் ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவும், சமூக இடைவெளியினை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டது.மேலும் மாணவ, மாணவியர்களுக்கு சுகாதாரமான குடிநீர் மற்றும் உணவுகள் வழங்கவும் உத்தரவிட்டார்.