May 26, 2023 தண்டோரா குழு
கடந்த 55 ஆண்டுகளாக ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி மற்றும் 19 வருடங்காளாக பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கோவையில் நடைபெற்று வருகின்றது.
இப்போட்டிகளில் அகில இந்திய அளவில் முன்னணியில் உள்ள அணிகள் பெருமையுடன் கலந்து கொள்வார்கள்.இப்போட்டிகள் 2023, மே 27 – ந் தேதி முதல் ஜுன் 1 – வரை 6 நாட்கள் கோவையில் நடைபெற உள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவரும் கோவை சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான ஜி.செல்வராஜ், துணைத்தலைவர் பழனிசாமி,செயலாளர் பாலாஜி ஆகியோர் கூறியதாவது,ஆண்கள் பிரிவில் இந்திய அளவில் முன்னணியில் உள்ள 10 அணிகள் மற்றும் பெண்கள் பிரிவில் 8 அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதில் ஆண்கள் பிரிவில் இந்திய கப்பல் படை அணி,இந்திய விமானப்படை அணி,இந்தியன் இரயில்வே அணி,பாங்க் ஆஃப் பரோடா அணி, கேரளா போலீஸ் அணி, இந்தியன் வங்கி அணி உட்பட 10 அணிகள் விளையாடுகின்றன.
பெண்கள் பிரிவில் கேரளா மாநில மின்சார வாரியம் அணி, கேரளா போலீஸ் அணி, தென்மேற்கு இரயில்வே அணி உட்பட 8 அணிகள் விளையாடுகின்றன.
ஆண்கள் பிரிவில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு ரூ.1 லட்சம் மற்றும் நாச்சிமுத்து கவுண்டர் சுழற்கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் டாக்டர்.என்.மகாலிங்கம் கோப்பையும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு பரிசாக ரூ.20 ஆயிரம்,நான்காம் இடம்பிடிக்கும் அணிக்கு ரூ.15 ஆயிரமும் வழங்கப்படும். பெண்கள் பிரிவில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு ரூ.50 ஆயிரம் மற்றும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் சுழற் கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ.25 ஆயிரம் மற்றும் சுழற் கோப்பையும் மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு பரிசாக ரூ.15 ஆயிரம்,நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.10 ஆயிரம்மும்,மேலும் இத்தொடரில் சிறப்பாக விளையாடும் வீராங்கனைக்கு சிறந்த விளையாட்டு வீராங்கனை என்ற விருதும் வழங்கப்படும்.
இப்போட்டிகள் 2023 மே 27 – ம் தேதி துவங்கும், இந்த போட்டியில் மே 30 வரை சுழல் முறையிலும், பின்பு ஒவ்வொரு முதல் இரண்டு இடங்கள் பெறும் அணிகள் 31-ம் தேதி நடைபெறும்.அரையிறுதிப் போட்டியில் விளையாடுவார்கள்.மேலும் அரையிறுதியில் வெற்றி பெறும் அணிகள் ஜுன் 1 – ம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் விளையாடுவார்கள்.போட்டிகளை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கிவைக்கவுள்ளார்.
மேலும் கவுரவ விருந்தினராக சி. ஆர். ஐ. பம்ப்ஸ் நிறுவனங்களின் இணை நிர்வாக இயக்குனரும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவருமான ஜி. செல்வராஜ் முன்னிலை வகிக்கின்றார் என்றனர்.