April 21, 2017 தண்டோரா குழு
மத்திய அரசின் சேவைகளை மற்றும் நலத்திட்டங்களில் பயன் பெற ஆதார் எண் கட்டாயமில்லை என அண்மையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும் வருமான வரிகணக்கு சமர்ப்பிக்கவும் இதர மத்திய அரசின் சேவைகளுக்கும் ஆதார் எண் காட்டாயமாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வருமானவரி தாக்கல் செய்ய ஆதார் கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசின் சேவைகளை மற்றும் நலத்திட்டங்களில் பயன் பெற ஆதார் எண் கட்டாயமில்லை என உச்ச நீதிமன்றம் அறிவுறித்தியும் ஆதார் அட்டையை பல திட்டங்களுக்கு கட்டாயமாக்கியது ஏன் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.இது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.