June 30, 2017 தண்டோரா குழு
ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் ஜூன் 30ம் தேதிக்கு பிறகும் செல்லுபடியாகும் என மத்திய நேரடி வரி விதிப்பு கழகம் இன்று அறிவித்துள்ளது.
வங்கி கணக்கு வைத்திருப்போர் மற்றும் வருமான வரி செலுத்தும் ஒவ்வொருவரும் ஜூன் 30 ம் தேதிக்குள் ஆதார் எண்ணை, பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு சமீபத்தில் கூறி இருந்தது. இதனையடுத்து பொதுமக்கள் ஆதார் எண்ணை, பான் கார்டுடன் இணைத்து வந்தனர்.
இந்நிலையில், ஆதார் எண்ணை, பான் கார்டுடன் இணைக்கப்படாவிட்டாலும் ஜூன் 30 க்கு பிறகு பான் கார்டுகள் செல்லும் என்று நேரடி வரி விதிப்பு கழகத்தின் தலைவர் சுசில் சந்திரா தெரிவித்துள்ளார்.
மேலும்,குறிப்பிட்ட தேதி அறிவிக்கப்படும் அந்த தேதி வரையிலும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.