July 12, 2017
தண்டோரா குழு
ஆதார் அட்டை தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
அரசின் சலுகைகளை பெற ஆதார் அட்டை அவசியம் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில், ஆதார் அட்டை தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
வரும் 18, 19ம் தேதிகளில் ஆதார் வழக்குகளை 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.