• Download mobile app
28 Apr 2025, MondayEdition - 3365
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆதார் மூலம் பெற்றோருடன் சேர்ந்த மனவளர்ச்சிக் குன்றிய குழந்தைகள்

July 11, 2017 தண்டோரா குழு

பெங்களூர் நகரில் மனவளர்ச்சி குன்றிய இரண்டு குழந்தைகள் ஆதார் அட்டை மூலம் அவர்களது பெற்றோருடன் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தின் பெங்களூரை சேர்ந்த மோனு, ஓம் பிரகாஷ் என்னும் இரண்டு மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள், அதன் பெற்றோரை பிரிந்து ஓசூர் சாலையில் உள்ள மாநில அரசால் நடத்தப்படும் குழந்தை பராமரிப்பு மையத்தில் வளர்ந்தனர்.

அந்த மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஆதார் அட்டை தர வேண்டும் என்பதற்காக யு.ஐ.டி.ஏ.ஐ சார்பில் ஆதார் பதிவு டிரைவ் நடத்தப்பட்டது. மோனு, ஓம் பிரகாஷ் என்னும் இரண்டு குழந்தைகளுக்கு நடத்திய சோதனையின் முடிவில், அவர்களுக்கு ஏற்கனவே ஆதார் அட்டை இருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த குழந்தைகளின் பெற்றோரை தொடர்புக்கொண்டு, குழந்தைகளின் அடையாளத்தை சரி பார்த்து அவர்களுடன் இணைக்கப்பட்டனர்.

கடந்த 2௦16-ம் ஆண்டு மார்ச் மாதம் 21-ம் தேதி, மனவளர்ச்சியால் பாதிக்கப்பட்ட சிறுவன் மோனுவை அந்த இல்லத்திற்கு அழைத்து வரப்பட்டான். அவனுடைய பெயர் என்னவென்று தெரியாததால், அவனுக்கு மோனு என்று அந்த இல்லத்தின் அதிகாரிகள் பெயரிட்டுள்ளனர்.

ஆனால், அவனுக்கு ஏற்கனவே இருந்த ஆதார் அட்டையில், அவன் மத்திய பிரதேஷ் மாநிலத்தின் இந்தூர் நகரை சேர்ந்தவன் என்றும் அவனுடைய பெயர் நரேந்திரா என்று இருப்பதை அதிகாரிகள் கவனித்துள்ளனர். உடனே அவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல துறை அதிகாரிகளுடன் தொடர்புக்கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களும் மோனுவின் பெற்றோரை விசாரித்ததில் மோனு அவர்களுடைய மகன் என்று உறுதிசெய்யப்பட்டது.

அதேபோல், மனவளர்ச்சி குன்றிய ஓம் பிரகாஷும் 2௦16ம் ஆண்டு மே 21 தேதி குழந்தை பராமரிப்பு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளான். ஓம் பிரகாஷ் ஜார்க்கண்ட் மாநிலத்தின் கர்வா மாவட்டத்தில் வசிக்கும் ஜகதீஷ் பிரஜாபதி மகன் ஓம் பிரகாஷ் பிரஜாபதி என்று தெரிய வந்துள்ளது. ராஞ்சியின் ரிசேர்வ் போலீஸ், அவனுடைய பெற்றோரை விசாரித்தபோது 2௦16ம் ஆண்டு காணாமல் போய்விட்டான் என்றும், ஓம் பிரகாஷ் வளர்ந்த இல்லத்தின் அதிகாரிகள் தந்த புகைப்படத்தில் இருப்பது அவர்களுடைய மகன் தான் என்றும் உறுதி செய்யப்பட்டது.

மேலும் படிக்க