July 15, 2022 தண்டோரா குழு
ஆதித்யா பிர்லா கேபிடல் லிமிடெட்டின் ஆயுள் காப்பீட்டு துணை நிறுவனமான ஆதித்யா பிர்லா சன் லைஃப் இன்சூரன்ஸ் புது ஏஃப் சேமிப்புத் தீர்வான ஆதித்யா பிர்லா சன் லைஃப் இன்சூரன்ஸ் ஃபிக்ஸட் மெச்சூரிட்டி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இணைக்கப்படாத, பங்குபெறாத எண்டோமென்ட் தயாரிப்பு, முதிர்ச்சியின் மொத்தத் தொகையாக முழு உத்தரவாதமான பலன்களை வழங்குகிறது. பிக்ஸட் டெப்பாசிட்டை விஞ்சும் வருமானங்கள் மற்றும் பாதுகாப்பை ஒருங்கிணைப்பதன் மூலம் பாலிசிதாரர்களுக்கு குறுகிய மற்றும் நீண்ட கால நிதிப் பாதுகாப்பை வழங்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆதித்யா பிர்லா சன் லைஃப் இன்சூரன்ஸ் ஃபிக்ஸட் மெச்சூரிட்டி திட்டம், ஆயுள் காப்பீட்டுடன் 6.41 சதம் வரை, துறையில் சிறந்த வருமானத்தை வழங்குகிறது. இந்த வட்டி விகிதங்கள் நாட்டின் பெரும்பாலான முக்கிய வங்கிகள் வழங்கும் நிலையான வைப்பு விகிதங்களை விட அதிகமாகும்.
அதன் புதிய எளிமைப்படுத்தப்பட்ட சேமிப்பு தீர்வு மூலம், ஆதித்யா பிர்லா சன் லைஃப் இன்சூரன்ஸ் அதன் பாலிசிதாரர்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்ற தொந்தரவில்லாத நிதி உத்தரவாதத்தைப் பெற உதவுகிறது.
இந்தத் திட்டம் ஒரு நிலையான வைப்புத்தொகை போன்ற ஒற்றை செலுத்துதல் முன்மொழிவு (பிரீமியம் செலுத்தும் காலம்) மேலும் பாலிசிதாரரை தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்றவாறு பரந்த அளவிலான பாலிசி காலங்களை (5-10 ஆண்டுகள்) தேர்வு செய்ய அனுமதிக்கிறது.
மேலும்,100 சதம் தொடங்கி,ஒவ்வொரு ஆண்டும் 1 சதம் சமர்ப்பிப்பு பலன் அதிகரிக்கும், பாலிசிதாரர்கள் பாலிசியை சமர்ப்பிப்பு செய்யும் பட்சத்தில் அவர்கள் பணத்தை இழக்காமல் இருப்பதை உறுதிசெய்யும்.ஆதித்யா பிர்லா சன் லைஃப் இன்சூரன்ஸ் தனது புதிய சலுகையின் மூலம், நிலையான வைப்புத்தொகை போன்ற எளிமைப்படுத்தப்பட்ட திட்டங்களை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு சேவை செய்ய விரும்புகிறது.
ஆதித்யா பிர்லா சன் லைஃப் இன்சூரன்ஸ் ஃபிக்சட் மெச்சூரிட்டி திட்டத்தின் அறிமுகம் குறித்து, ஆதித்ய பிர்லா சன் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் எம்.டி அண்டு சி.இ.ஓ.,கமலேஷ் ராவ் கூறுகையில்,
“இந்த நிச்சயமற்ற காலகட்டத்தில், எங்கள் பாலிசிதாரர்களுக்கு, எந்தவொரு நிகழ்வின் வருகையிலும் சரியான விதத்தில் அவர்களை காப்பீடு செய்ய தேவையான நிதி உத்தரவாதம் மற்றும் தீர்வுகளை வழங்குவதில் நாங்கள் தொடர்ந்து உதவ எதிர்பார்த்துள்ளோம். ஆதித்யா பிர்லா சன் லைஃப் இன்சூரன்ஸ் ஃபிக்ஸட் மெச்சூரிட்டி திட்டம் அவர்களின் அனைத்து கனவுகளுக்கும் தேவையான நிதி உத்தரவாதத்தை துறை சிறந்த வருமானத்துடன் வழங்குகிறது, அதற்கேற்ப அவர்களின் முதலீடுகளைத் திட்டமிட அனுமதிக்கிறது.
இது அவர்களுக்கு ஒரு விரிவான லைஃப் கவரை வழங்குகிறது, இது ஒரு நிகழ்வின் போது அவர்களின் குடும்பத்தைப் பாதுகாக்கிறது. பிக்ஸட் டெப்பாஸிட்டை விஞ்சும் வருமானங்கள் உடன், ஆயுள் காப்பீட்டு சேமிப்புத் திட்டத்தின் அனைத்து வழக்கமான அம்சங்களிலிருந்தும் பாலிசிதாரர்கள் பயனடைய இந்தத் திட்டம் உதவுகிறது “என்றார்.
ஆதித்யா பிர்லா சன் லைஃப் இன்சூரன்ஸ் ஃபிக்ஸட் மெச்சூரிட்டி திட்டம் பல்வேறு வகையான காப்பீட்டுத் தொகையைத் தேர்ந்தெடுப்பதன் பலனை வழங்குகிறது. பாலிசிதாரர்கள் விருப்பம் யு (1.25ஓ முதல் 1.77ஓ வரை உறுதியளிக்கப்பட்ட தொகை) அல்லது விருப்பம் டீ (10ஓ முதல் 10.42ஓ வரை உறுதியளிக்கப்பட்ட தொகை) ஆகியவற்றைப் பெறலாம். வருமானம் உறுதி செய்யப்பட்ட தொகையின் தேர்வைப் பொறுத்தது; இதனால், ஆப்ஷன் பி உடன் ஒப்பிடும்போது ஆப்ஷன் ஏ அதிக வருமானத்தை ஈர்க்கும்.
ஆதித்யா பிர்லா சன் லைஃப் இன்சூரன்ஸ் பிக்சட் மெச்சூரிட்டி இன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
• உத்தரவாத முதிர்வு:
வாடிக்கையாளர்கள் சந்தை நிலைமைகளைப் பொருட்படுத்தாமல் முழு உத்தரவாதமான பலன்களைப் பெறுவார்கள்.
• நிதிப் பாதுகாப்பு:
ஆயுள் காப்பீடு செய்தவரின் மரணம் ஏற்பட்டால், வாடிக்கையாளர்கள் விரிவான அபாயக் காப்பீட்டைப் பெறுவார்கள்.
• வளைந்து கொடுக்கும் தன்மை:
வாடிக்கையாளர்கள் பாலிசி காலங்கள் (5-10 ஆண்டுகள்) மற்றும் உறுதி செய்யப்பட்ட மடங்குகளின் தேர்வைப் பெறலாம்.
• பாலிசி கடன்:
குறைந்தபட்ச பாலிசி கடன் ரூ. 5,000 மற்றும் பிளான் ஆப்ஷன் A க்கு அதிகபட்சம் 80 சதம் அண்டு பிளான் ஆப்ஷன் B க்கு 65 சதம் அந்த தேதியில் நிலுவையில் உள்ள பாலிசி கடன் பாக்கி ஏதுமிருந்தால் அது கழித்தது போக பொருந்தக்கூடிய சரண்டர் மதிப்பு.
• வரிச் சலுகைகள்:
வரிச் சலுகைகள் பிரீமியம் செலுத்தும் போது அல்லது பலன்களைப் பெறும்போது நிலவும் வரிச் சட்டங்களுக்கு உட்பட்டது.
திட்டத்தைப் பெறுவதற்கான அதிகபட்ச நுழைவு வயது 60 ஆண்டுகள் (விருப்பம் யு) மற்றும் 50 ஆண்டுகள் (விருப்பம் B), குறைந்தபட்ச வயது 8 ஆண்டுகள். மேலும், குறைந்தபட்ச வருடாந்திர பிரீமியம் ரூ. 12,000 மற்றும் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.15000.