September 23, 2017 தண்டோரா குழு
ஆதி திராவிடர் நல மாணவ, மாணவியர் விடுதிகளை மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வருவாய் கோட்டாட்சியர்கள் தணிக்கை செய்ய வேண்டும் என்று ஆதிதிராவிடர் நல தேசிய தாழ்த்தப்பட்டோர் துணை ஆணையத்தின் துணைத்தலைவர்எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் கோவையில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் கூறியதாவது,
“அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் ஆதி திராவிடர் இன மாணவ, மாணவியர்களுக்கு வழங்ப்படும் 25 சதவிதம் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுத்தப்பட வேண்டும்.
சிறந்த நற்பெயர் பெற்ற பள்ளிகளில் இத்திட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
மேலும் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தாட்கோ நிறுவனத்தினர் வங்கிக் கடன் வழங்க வேண்டும். கொத்தடிமை தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்ப்பட வேண்டும். துப்புரவுப் பணியாளர்களாக பணிபுரியும் நபர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும்.
அதே போல் அவர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்துகொடுக்க வேண்டும். மேலும் ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக இயங்கி வரும் குனியமுத்தூர் நல பள்ளி மாணவர் விடுதியினை கல்லூரி மாணவர் விடுதியாக தரம் உயர்த்தபட தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஆதி திராவிடர் நல மாணவ, மாணவியர் விடுதிகளை மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வருவாய் கோட்டாட்சியர்கள் தணிக்கை செய்ய வேண்டும்.
வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வரப்பட்டுள்ள மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக தீருதவித் தொகை வழங்க வேண்டும்.”
ஆதிதிராவிடர் நல தேசிய தாழ்த்தப்பட்டோர் துணை ஆணையத்தின் துணைத்தலைவர் மாண்புமி;கு திரு.எல்.முருகன் தெரிவித்தார்.