• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆத்தூர் மற்றும் கரூர் ரயில் நிலையங்களுக்கு வரவுள்ள ‘அறிவியல் கண்காட்சி ரயில்’

June 16, 2017 தண்டோரா குழு

பருவச்சூழல் மாறுபாடு பற்றி விளக்கும் சிறப்பு அறிவியல் கண்காட்சி ரயில் ஆத்தூர் மற்றும் கரூர் ரயில் நிலையங்களுக்கு நாளை வரவுள்ளது.

அறிவியல் பற்றி மாணவர்கள், பொதுமக்களிடையே விழிப்புணர்வு மற்றும் ஈடுபாடு உண்டாக்கும் பொருட்டு, இந்திய ரயில்வேயும், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையும் இணைந்து, அக்டோபர் 2007 முதல் அறிவியல் ரயிலை இயக்கி வருகின்றன.

இதுவரை நாடெங்கும் 8 முறை சுற்றி வந்துள்ள அறிவியல் ரயில் 1,53,00 கிமீ பயணம் செய்து 495 ரயில் நிலையங்களை சென்று வந்துள்ளன. மிக அதிக தொலைவு பயணம் செய்த மற்றும் அதிகமானோர் கண்டு களித்துள்ளதாக லிம்கா சாதனைப் புத்தகத்தில் அறிவியல் ரயில் 12 முறை இடம் பெற்றுள்ளது.

இம்முறை பருவச்சூழல் மாறுபாடு பற்றிய சிறப்பு ரயிலாக இயக்கப்படும் அறிவியல் ரயில் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ம் தேதி, புதுதில்லி சப்தர்ஜங் ரயில்நிலையத்தில் இருந்து மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு அவர்களால் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டு, இம்முறை நாடெங்கிலும் 19,000 கிமீ பயணித்து சேலம் கோட்டத்தின் ஆத்தூர் மற்றும் கரூர் ரயில் நிலையங்கள் உட்பட 68 ரயில்நிலையங்களுக்கு வருகை தர உள்ளது.

புதுச்சேரியில் கண்காட்சியை முடித்த பிறகு நாளை இந்த சிறப்பு அறிவியல் ரயில் ஆத்தூர் ரயில் நிலையத்தில் வரும் 19-ம் தேதி வரையும், பின்னர் 2௦-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை கரூர் ரயில் நிலையத்திலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு அதன் பின்னர் கொடைக்கானல் ரோடு புறப்பட்டு செல்லும்.

காட்சி நேரம் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை. இந்த ரயிலில் உள்ள 13 ரயில் பெட்டிகளில் சுற்றுச்சூழல் மாறுபாடு பற்றிய பல்வேறு காட்சிப் பொருட்களும், மீண்டும் பயன்படுத்தக் கூடிய சக்தி, பயோடொக்னாலஜி, சிறுவர்களுக்கான சிறப்பு கண்காட்சிப் பெட்டி மற்றும் 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பல்வேறு அறிவியல் சோதனைகளை நேரில் செய்து பார்க்கும் சோதனைக்கூடம் போன்றவையும் இருக்கும்.

சூரிய மின்சக்தியை பயன்படுத்தும் வகையில் 3 ரயில் பெட்டிகளில் சூரிய மின்சக்தி பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன.ஆத்தூர் ரயில்நிலையத்தில் நாளை காலை சுமார் 11.30 மணியளிவில் இந்த அறிவியல் ரயில் கண்காட்சியை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா அவர்கள் தொடக்கி வைக்கிறார்.

மேலும் படிக்க