June 16, 2022
தண்டோரா குழு
ஆனைமலை புலிகள் காப்பகம் மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குழந்தைகளை பள்ளிக்குச் செல்ல பேட்டரி வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பழைய சின்னார்பதியில் 50க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வாகன வசதி இல்லாமல் பல வருடங்களா பள்ளிக்கு குழந்தைகள் பெற்றோர்களுடன் நடந்து சென்றுள்ளனர்.இவர்களின் நீண்ட நாள் கோரிக்கை வாகன வசதி வேண்டுமென வனத்துறைக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
இதை அடுத்து ஆனைமலை புலிகள் காப்பகம் கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் உத்தரவின் பேரில் ஆலம் தனியார்தொண்டு நிறுவனமான பழைய சர்க்கார்பதி குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல பேட்டரி வாகனம் இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் மலைவாழ் மக்கள் வசிக்கும் செட்டில்மெண்ட் பகுதிகளுக்கு சின்னார் பதி, நாக௹த்து, எருமை பாறை, கோழிகமுத்தி பகுதிகளுக்கு விரைவில் பேட்டரி வாகனம் செயல்படுத்தப்படும் எனஆனைமலை புலிகள் காப்பகம்கள துணஇயக்குனர் கணேசன் தெரிவித்தார்.
இதில் வன உதவி பாதுகாவலர் செல்வம்,ஆலம் பவுண்டேஷன் நிறுவனர் லீமா ரோஸ் மார்ட்டின், வனச்சரகர் புகழேந்தி மற்றும் தன்னார்வலர்கள், வனத்துறையினர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.