June 2, 2017 தண்டோரா குழு
கோவை போத்தனூர் பகுதியில்,ஊருக்குள் புகுந்த காட்டு யானை தாக்கி 4 பேர் பலி மற்றும் 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி காட்டு யானை பிடிக்கப்பட்டது. யானையை பிடிக்க வனத்துறையுடன் இணைந்து 100க்கும் மேற்பட்ட காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு கும்கி யானைகள் யானைகள் மூலமாக காட்டு யானையை பிடித்தனர்.
அச்சமயம் பொதுமக்கள் சிலர் ஆபத்தை உணராமல் விளையாட்டாக அங்கு நின்று செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். அந்நேரத்தில் அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சிலர் அவர்களை கண்டிக்காமல் அவர்களுடன் இணைந்து செல்பி எடுத்துக் கொண்டிருந்தது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ப்தியை ஏற்படுத்தியது.
இனி வரும் காலங்களிலாவது இது போன்ற நேரத்தில் காவல்துறையினர் கண்ணியதுடன் செயல்படவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.