February 20, 2017 தண்டோரா குழு
ஆப்கானிஸ்தானில் ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு வீசி, வெடித்ததில் பெண்கள், குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.
இது குறித்து ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் சர்ஹாதி ஸ்வாக் திங்கள்கிழமை கூறுகையில், “லக்மான்ஸ் பாத் பக் மாவட்டத்தில் ஒரு வீட்டின் மீது மர்ம ஆசாமிகள் ஞாயிறன்று இரு கையெறி குண்டுகளை வீசினர். அதில், 11 பேரும் பலியாயினர். 3 பேர் காயமடைந்துள்ளனர்” என்றார்.
சுகாதார அதிகாரி கூறுகையில், “இச்சம்பவத்தில் காயமடைந்த ஒருவரை அருகில் இருந்த நன்கர்கார் மாகணத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் வழியில் இறந்துவிட்டார்” என்றார்.
தற்போது பெருகி வரும் சண்டையில் பொதுமக்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2009ம் ஆண்டில் அப்பாவி மக்களில் 11,5௦௦ பேர் இறந்தனர். அதைப் போல் 2016ம் ஆண்டிலும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. மன்றமே பதிவு செய்துள்ளது.
கிழக்கு மாகாணமான பக்டிகாவில் கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 17) சாலையோரத்தில் தீவிரவாதிகள் வைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததில் பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 8 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்க மேற்கொண்ட வான்வழி தாக்குதலில் தென் மாகாணமான ஹெல்மந்தில் கடந்த வாரம் 25 பேர் இறந்தது குறித்து ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.