October 21, 2017 தண்டோரா குழு
கேரளாவில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடாமல் சென்ற கார் ஓட்டுநர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலத்தில், கடந்த அக்டோபர் 18ம் தேதி, பெரும்பாவூர் அரசு மருத்துவமனையில் இருந்த பச்சிளங் குழந்தையை அவசர மருத்துவ சிகிச்சைக்காக எர்ணாகுளம் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அதன் பெற்றோர் மற்றும் உதவி மருத்துவர்கள் கொண்டு சென்றுள்ளனர்.
அப்போது, ஆம்புலன்ஸ் முன்பாக ஒரு சொகுசு கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. ஆம்புலன்ஸின் சைரன் மற்றும் வாகனத்தின் ஹோர்ன் சத்தம் கேட்ட பிறகும், அதை முன் செல்ல வழிவிடமால்,அந்த கார் சென்று கொண்டிருந்தது. இதனால் ஆம்புலன்ஸ் ஊழியர் ஒருவர், இதனை கைபேசியில் பதிவு செய்தார் அந்த சம்பவம் குறித்து காவல்துறை நிலையத்தில் புகார் அளிக்கும்போது, அந்த காணொளியை கட்டியுள்ளார். அந்த காரின் ஓட்டுநர் ஆம்புலன்ஸுக்கு வலிவிடாததால், குழந்தையை 15 நிமிடம் தாமதமானதாக எர்ணாகுளம் மருத்துவமனைக்கு செல்ல நேர்ந்தது என்று ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநர் நிர்மல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்துள்ளனர். மேலும் அவருடைய உரிமம் தற்காலிகமாக ரத்து செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.