• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆர்ஆர் கேபல் ரூ.1 கோடிக்கும் அதிகமான உதவித்தொகைகளை அறிவிக்கிறது

July 7, 2022 தண்டோரா குழு

ஆர்ஆர் குளோபல் இன்,ருளுனு 1.25 பில்லியன் குழுமத்தின் ஒரு பகுதியும் மற்றும் இந்தியாவில் உள்ள முன்னணி கம்பி மற்றும் கேபிள் உற்பத்தியாளருமான ஆர்ஆர் கேபல், இந்தியாவில் உள்ள எலக்ட்ரீஷியன்களின் குழந்தைகளுக்கு உதவுவதற்காக, கேபல் ஸ்டார் ஸ்காலர்ஷிப் திட்டத்தை அறிவித்தது. இந்த முயற்சியானது ஆர்ஆர் குளோபலின் மிஷன் ரோஷ்னியின், அதிகாரம் பெற்ற மற்றும் படித்த இந்தியாவை அடைவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாகும். இந்த முன்முனைவின் மூலம், எலக்ட்ரீஷியன்களின் குழந்தைகளின் மேல்நிலைக் கல்விக்காக ஆர்ஆர் கேபல், ரூ.1 கோடிக்கு மேல் முதலீடு செய்யவுள்ளது.

கேபல் ஸ்டார் ஸ்காலர்ஷிப் திட்டம், இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற எலக்ட்ரீஷியன் குழந்தைகளுக்கானது. சிறந்த 1,000 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு தலா ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும். தேர்வுக்கான வழிகாட்டுதல்கள் எளிமையானவை மற்றும் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன:

• பத்தாம் வகுப்பு தேர்வுகளில் குறைந்தபட்சம் 60மூ மதிப்பெண்களுடன் முதல் முயற்சியில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள்

• விண்ணப்பதாரரின் தந்தைஃதாய் ஆர்ஆர் கேபலில் எலக்ட்ரீஷியனாக தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

உதவித்தொகை திட்டத்தைப் பற்றிப் பேசுகையில், ஆர்ஆர் குளோபல் நிறுவனத்தின் இயக்குநர் கீர்த்தி கப்ரா,

“கேபல் ஸ்டார்ஸ் இன் முன்முயற்சியின் மூலம், எலக்ட்ரீஷியன்களின் குழந்தைகளை உயர்ந்த இலக்கை அடையச் செய்து, தங்களுக்கான வலுவான எதிர்காலத்தை உருவாக்க ஊக்குவிப்பதும், அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதும் எங்களின் நோக்கம் ஆகும். நாங்கள் ஒரு நிறுவனமாக, எங்களின் வணிக வளர்ச்சி எப்போதும் எங்கள் சமூகம் மற்றும் எங்கள் பங்குதாரர்களின் வெற்றிக்கு நேரடியாக விகிதாசாரமாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறோம். எலக்ட்ரீஷியன் சமூகம் எங்கள் நிறுவனத்தின் இதயத்தில் உள்ளது, இந்த உதவித்தொகை மூலம், அவர்களின் குடும்பங்களுக்கும், குழந்தைகளுக்கும், பிரகாசமான நாளைய தினத்தை வழங்குவோம் என்று நம்புகிறோம்.

ஒவ்வொரு கேபல் ஸ்டாரும் தங்கள் விருப்பப்படி, நிலையான மற்றும் நல்ல ஊதியம் பெறும் வேலையைப் பெற அனுமதிக்கும் உயர் படிப்பைத் தொடர்வதன் மூலம் ஆர்வத்தைத் தூண்ட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்தியாவை உதயமாகக் கொண்ட நிறுவனமாக, ஆர்ஆர் கேபல் இந்த நாட்டின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் உள்ளது, மேலும் இதுபோன்ற முயற்சிகள் மூலம் இன்றைய குழந்தைகளை நாளைய தலைவர்களாக ஆக்குவோம் என்று நம்புகிறோம் “என்று கூறினார்.

வணிகத்திற்கு அப்பாற்பட்ட பங்களிப்பை வழங்குவதிலும், தகுதியானவர்களின் வாழ்க்கையை ஒளியூட்டுவதிலும் இந்த நிறுவனம் நம்புகிறது. இந்த எண்ணம் ஆர்ஆர் கேபலின், கேபல் ஸ்டார் ஸ்காலர்ஷிப் திட்டத்தின் யோசனைக்கு வழிவகுத்தது. இந்த மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை நோக்கி முதல் படியை எடுத்து வைக்கும் விளிம்பில் உள்ளனர் மேலும் ஆர்ஆர் கேபல் இந்த குழந்தைகளின், இந்த மிக முக்கியமான கட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறது.

ஆர்ஆர் குளோபல் குழுவின் ஊளுசு முன்முயற்சியின் ஒரு பகுதியாக, 2020 ஜனவரியில், ஆர்ரோஷினி மிஷன் தொடங்கப்பட்டது. நிறுவனத்தின் முயற்சிகள் கல்வி, அதிகாரமளித்தல், திறன் மேம்பாடு, சுகாதாரம் மற்றும் நிலையான தீர்வுகளை நோக்கி அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. ஆர்ஆர் குளோபல் ஆனது, முன்னேற்றம் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியை ஆதரிப்பதன் மூலம், மக்களின் வாழ்வில் நீடித்த நேர்மறையான மாற்றத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, திறமைகளை வளர்த்து, தொழில்நுட்பம் மூலம் மக்களுக்கு சக்தி அளித்து மேலும் பெண்களை எதிர்காலத் தலைவர்களாக ஆக்குகிறது.

மேலும் படிக்க