• Download mobile app
22 Nov 2024, FridayEdition - 3208
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு இந்த ஆண்டும் அனுமதி மறுப்பதா? – வானதி சீனிவாசன் அறிக்கை.!

September 21, 2024 தண்டோரா குழு

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்

நூற்றாண்டு காணும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி மறுப்பது தி.மு.க. அரசின் பாசிச முகத்தை காட்டுகிறது.1925ம் ஆண்டு விஜயதசமி அன்று ‘ராஷ்ட்ரீய ஸ்வயம்சேகவ சங்கம்’ (ஆர்.எஸ்.எஸ்) தொடங்கப்பட்டது. அதனால் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியை முன்னிட்டு நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சீருடை அணிந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் அணிவகுப்பும், பொதுக்கூட்டமும் நடப்பது வழக்கம்.

தமிழகத்தில் 1940களில் இருந்த ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நடந்து வருகிறது. ஆனால், தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு, பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை அனுமதி மறுத்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த திமுக அரசின் காவல்துறை அனுமதிக்கவில்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த பிறகே, சர்வாதிகார ஆட்சியைப் போல பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.ஏற்கனவே உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலங்கள் நடந்திருக்கும் நிலையில், இந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தமிழகத்தில் 58 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு, பொதுக்கூட்டம் நடத்த அந்தந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாநகர காவல் ஆணையர்களிடம் அனுமதி கேட்டு ஆர்.எஸ்.எஸ் விண்ணப்பித்துள்ளது.

இதுவரை எந்த பதிலையும் தராமல் காவல்துறை இழுத்தடித்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளும் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்தது. அதுபோல இந்த ஆண்டும் செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு என்பது சீருடை அணிந்து ராணுவம் போல கட்டுப்பாட்டுடன் நடக்கும் அணிவகுப்பு. இதுவரை நடந்த ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புகள் அனைத்தும் மிகவும் அமைதியுடன் நடந்திருக்கிறது. காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கும் கேரளம் உட்பட நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் எந்தப் பிரச்னையும் இல்லாமல் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடக்கும்போது, தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுப்பது திமுக அரசின் பாசிச தன்மையையே காட்டுகிறது.இந்தியா ஒரு ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் அணிவகுப்பு, பேரணி நடத்த நமது அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம் ஒரு பக்கம் முழங்கிக் கொண்டே, மறு பக்கம், அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையைப் பறிக்கிறது பாசிச திமுக அரசு. இது கடும் கண்டனத்திற்குரியது.

இந்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா ஆண்டு. உலக வரலாற்றில் துவங்கிய நாளில் இருந்து எந்த பிளவையும் சந்திக்காமல் தொடர்ந்து 100 ஆண்டுகள் மக்களின் நன்மதிப்பை பெற்று வெற்றிகரமாக செயல்படும் இயக்கம் ஆர்.எஸ்.எஸ் நாட்டின் குடியரசுத் தலைவர், குடியரசு துணை தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்தவர்கள். அந்த அமைப்பால் ஊக்கம் பெற்று இந்த நிலையை அடைந்தவர்கள்.

நாட்டை வழிநடத்தியவர்களும், இப்போது வழிநடத்துபவர்களும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பால் வளர்ந்தவர்கள். அப்படி இருக்கும் குறுகிய எண்ணத்துடன் நூற்றாண்டு காணும் இயக்கத்தின் அணிவகுப்புக்கு அனுமதி மறுப்பதை ஏற்க முடியாது. எனவே, அக்டோபர் 6-ம் தேதி நடக்கும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு தமிழ்நாடு காவல்துறை அனுமதி அளிக்க வேண்டும். காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் தலையிட்டு ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க